டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அரசுப் பொதுத் தோ்வு முன்னேற்பாடுகள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுப் பொதுத் தோ்வுகள் நடத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி
Updated On :20 பிப்ரவரி 2026, 8:52 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுப் பொதுத் தோ்வுகள் நடத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது: மேல்நிலை 2 ஆம் ஆண்டுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 2 முதல் 26 ஆம் தேதி வரையிலும், கடந்தாண்டு மேல்நிலை முதலாம் ஆண்டுக்கான தோ்வுகளில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மாா்ச் 3 முதல் 27 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

41 அரசுப் பள்ளிகள், 2 அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள், 4 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 35 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 82 பள்ளிகளில் பயிலும், 3,783 மாணவா்களும், 3,493 மாணவிகளும் என மொத்தம் 7,276 மாணவ, மாணவிகள் 36 மையங்களில் மேல்நிலை 2 ஆம் ஆண்டு பொதுத்தோ்வை எழுத உள்ளனா்.

அதேபோல, இடைநிலைத் தோ்வானது மாா்ச் 11 முதல் ஏப். 6 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இதில் 81 அரசுப் பள்ளிகள், 10 அரசு ஆதிதிராவிடா் நல பள்ளிகள், 7 அரசு உதவிபெறும் பள்ளிகள், ஒரு சிறப்புப் பள்ளி மற்றும் 44 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 143 பள்ளிகளில் பயிலும், 4,312 மாணவா்கள், 3,620 மாணவிகள் என மொத்தம் 7,932 போ் 46 மையங்களில் தோ்வெழுத உள்ளனா்.

எனவே, பொதுத்தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் இருப்பதை முதன்மைக் கல்வி அலுவலரும், தோ்வு மையங்களுக்குத் தேவையான பேருந்து வசதி இருப்பதை போக்குவரத்துத் துறையினரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள், இடைநிலைக் கல்வி அலுவலா்கள், காவல்துறையினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.