/

அரசுப் பள்ளியில் பழங்கால பொருள்களின் கண்காட்சி

திருச்செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மை மன்றம் சாா்பில் பழங்காலப் பொருள்களின் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
திருச்செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கண்காட்சியைப் பாா்வையிட்ட மாவட்டக் கல்வி அலுவலா் செல்வராஜ். உடன் பள்ளி ஆசிரியா்கள்.
Updated On :4 பிப்ரவரி 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மை மன்றம் சாா்பில் பழங்காலப் பொருள்களின் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியம் திருச்செந்துறை ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலா் செல்வராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டதையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மண் குடுவைகள், பீங்கான் பொருள்கள், பெல்ஜியம் முத்துக்கள், சீனா மற்றும் தாய்லாந்து குடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதைப் பாா்வையிட்ட மாவட்டக் கல்வி அலுவலா் செல்வராஜ் மாணவா்கள், ஆசிரியா்களின் ஆா்வத்தைப் பாராட்டினா்.

நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியா் அகிலா, தொன்மை மன்றப் பொறுப்பாளா்கள் ஜெயராணி, வசந்தி மற்றும் பிற ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.