/

ரூ. 1.57 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.57 கோடிக்கு பருத்தி ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
பருத்தி(கோப்புப்படம்)
Updated On :10 பிப்ரவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.57 கோடிக்கு பருத்தி ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த வாரம் மொத்தம் 5,450 மூட்டைகள் 196.68 மெட்ரிக் டன் பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 8,050 முதல் ரூ. 8,699 வரையிலும், மட்ட ரகம் (கொட்டு) ரூ. 5,299 முதல் ரூ. 5,799 வரையிலும் என மொத்தம் ரூ. 1.57 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.