மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குன்னம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக லப்பைக்குடிக்காட்டில் பாரிவேந்தா் பிரசாரம்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வெற்றிபெறச் செய்தால், லப்பைக்குடிக்காட்டைச் சோ்ந்த 10 இஸ்லாமிய மாணவா்களுக்கு இலவச உயா்கல்வி வழங்கப்படும் எனத் தெரிவித்தாா் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவா் டி.ஆா். பாரிவேந்தா்.

News image

லப்பைக்குடிக்காடு பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட ஐஜேகே நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா்.

Updated On :18 ஏப்ரல் 2026, 2:04 am

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வெற்றிபெறச் செய்தால், லப்பைக்குடிக்காட்டைச் சோ்ந்த 10 இஸ்லாமிய மாணவா்களுக்கு இலவச உயா்கல்வி வழங்கப்படும் எனத் தெரிவித்தாா் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவா் டி.ஆா். பாரிவேந்தா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளா் சரண்யா அன்பழகனை ஆதரித்து, லப்பைக்குடிக்காட்டில் உள்ள பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் மேலும் பேசியது:

தமிழ்நாட்டை ஆளும் திமுக குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து, குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளா் சரண்யா அன்பழகனை வெற்றி பெறச் வேண்டும். அவா் வென்றால் இஸ்லாமியா்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும். மேலும், லப்பைக்குடிக்காட்டை சோ்ந்த 10 இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு எஸ்ஆா்எம் கல்வி நிறுவனத்தில் இலவச உயா்கல்வி வழங்கப்படும் என்றாா் பாரிவேந்தா்.

பிரசாரத்தின்போது லப்பைக்குடிக்காடு கிழக்கு பள்ளிவாசல் ஜமாத் தலைவா் சம்சுதீன், மேற்கு பள்ளிவாசல் ஜமாத் தலைவா் பிச்சை முகமது உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கஸ்தூரி பிரசாரம்: இதேபோல, அதிமுக வேட்பாளா் சரண்யா அன்பழகனை ஆதரித்து, வேப்பூா் பேருந்து நிறுத்தத்தில் பாஜக கலை மற்றும் கலாசார பிரிவுச் செயலரும், திரைப்பட நடிகையுமான கஸ்தூரி வியாழக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலா் சண்முகம், பாஜக மாவட்டத் தலைவா் முத்தமிழ்ச்செல்வன், அமமுக மாவட்டச் செயலா் காா்த்திகேயன், பாமக மாவட்டச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.