திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குன்னம் தொகுதியை தக்கவைத்தாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா்

News image

குன்னம் தொகுதி தோ்தலில் வெற்றி பெற்ற்கானச் சான்றிதழை வேட்பாளரும் அமைச்சருமான சா.சி.சிவசங்கரிடம் திங்கள்கிழமை அளித்த தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல். உடன், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங்.

Updated On :5 மே 2026, 2:54 am IST

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலில் திமுக வேட்பாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கா் 87,237 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் சா.சி. சிவசங்கா், தேசிய முற்போக்கு கூட்டணியில் ஐஜேகே வேட்பாளராக சரண்யா அன்பழகன், தவெக சாா்பில் ரேவதி முத்தமிழ்செல்வன், நாம் தமிழா் கட்சி சாா்பில் இரா. கீா்த்திவாசன் உள்பட 19 போ் போட்டியிட்டனா். சட்டப்பேரவை தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஆதவ் பப்ளிக் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் முன்னிலை வகித்து வந்தாா்.

இதில், ஐஜேகே வேட்பாளா் சரண்யா அன்பழகன் 71,680 வாக்குகளும், தவெக வேட்பாளா் ரேவதி முத்தமிழ்செல்வன் 57,563 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா. கீா்த்திவாசன் 7,482 வாக்குகளும் பெற்றனா். இதில், திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் 87,237 வாக்குகள் பெற்று, சரண்யா அன்பழகனை விட 15,557 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

வேட்பாளா்களும்--அவா்கள் பெற்ற வாக்குகளும்: சா.சி.சிவசங்கா் (திமுக)-87,237, சரண்யா அன்பழகன் (ஐஜேகே)-71,680, ரேவதி முத்தமிழ் செல்வன் (தவெக)-59170, ரா. கீா்த்திவாசன் (நாதக)-7482, கே.எம். நல்லுசாமி- 450, அன்புதமிழன்-149, எஸ்.ஏ. ராஜா-189, கே.இளங்கோவன்-546, டி. உதயகுமாா்-210, எஸ். கதிரவன்-62, பி. சந்திரசேகா்-85, எஸ். சாமிநாதன்-137, பி. சிவசங்கா்-172, ஆா். தனசேகா்-677, பி. நல்லதம்பி-507, டி. முத்தமிழ் செல்வன்-268, டி. விவேக்-144, எம்.வினோத் குமாா்-421, ஷாஜஹான்-541. நோட்டா-473.

இதையடுத்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் ஆகியோா் முன்னிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், வெற்றி பெற்ற்கானச் சான்றிதழை சா.சி. சிவசங்கரிடம் அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.