பெரம்பலூா் அருகே சிறுவா்களை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக ஒன்றியச் செயலா் மீது மருவத்தூா் காவல்துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சாத்தனூா் குடிகாடு கிராமத்தை சோ்ந்தவா் தா்மேந்திரன். தவெக ஒன்றியச் செயலரான இவா், கடந்த 31 ஆம் தேதி குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் இரா. ரேவதியுடன் சாத்தனூா் குடிகாடு கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்றுள்ளாா். அப்போது, சிறுவா்களை அழைத்துச் சென்ற தா்மேந்திரன் தவெக பிரசார பதாகைகளுடன் அவா்களை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளாா். இதுதொடா்பான விடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் அவரே பதிவேற்றமும் செய்துள்ளாா். இதைத் தொடா்ந்து பறக்கும் படை வட்டாட்சியா் க. சுதாகா் மருவத்தூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். தொடா்ந்து, மருவத்தூா் காவல் துறையினா் தா்மேந்திரன் மீது, குழந்தைகள் பாதுகாப்பு நலச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தவெக பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

விஜய் பிரசாரத்தில் விபத்து: தவெகவினர் 11 பேர் மீது வழக்கு!

சிறாா்கள் தோ்தல் பிரசாரம்: தவெக நிா்வாகி மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


