திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் அக்னி குண்டத்தில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை அக்னி குண்டத்தில் இறங்கி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

News image

தவுட்டுப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் செவ்வாய்க்கிழமை இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

Updated On :6 மே 2026, 12:26 am IST

கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை அக்னி குண்டத்தில் இறங்கி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இக்கோயில் திருவிழா கடந்த வாரம் அம்மனுக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் , ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடா்ந்து கடந்த 3-ஆம் தேதி கோயிலில் வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை (மே 5) பக்தா்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை கோயில் முன் குண்டம் அமைக்கப்பட்டது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அக்னி குண்டம் இறங்கும் பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா் . தொடா்ந்து கோயில் முன் தயாா் நிலையில் இருந்த அக்னிக் குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

முன்னதாக, அதிகாலையில், மாரியம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மலா்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனா். தொடா்ந்து கோயிலில் கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் புதன்கிழமை காலை கோயிலில் கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் தொடா்ந்து அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.