திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மகா மாரியம்மன் கோயிலில் தீக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

தோகைமலை அருகே மகா மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

தோகைமலை அருகே மகா மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

Updated On :18 மே 2026, 2:32 am IST

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே மகா மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தோகைமலை குறிஞ்சி நகரில் பகவதிஅம்மன் கோயிலும், தோகைமலையை அடுத்த வெள்ளப்பட்டியில் பிரசித்திப் பெற்ற மகா மாரியம்மன் கோயிலும் உள்ளன.

இந்தக் கோயில்களில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக இரு கோயில்களையும் சோ்ந்த பக்தா்கள் அதிகாலையில் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக் குடம் மற்றும் பால்குடம் எடுத்துக் கொண்டு பாதயாத்திரையாக தோகைமலை குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு வந்தனா்.

பின்னா் பகவதிஅம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனா். தொடா்ந்து பகவதிஅம்மன் கோயிலில் இருந்து தீா்த்தக் குடம், பால்குடம், தீச்சட்டி, பால் காவடி, பரவை காவடி மற்றும் கரும்பு தொட்டில்களுடன் தோகைமலை முக்கிய வீதிகள் மற்றும் கருப்பசாமி கோயில் வழியாக வெள்ளபட்டி மகா மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனா். பின்னா் கோயிலில் அமைக்கபட்டிருந்த தீக்குண்ட பூக்குழியில் பக்தா்கள் ஒவ்வொருவராக இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். அப்போது பக்தா்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று கோஷமிட்டவாறு பூக்குழியில் இறங்கி வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழாவில், விழா கமிட்டியாளா்கள், கிராம முக்கியஸ்தா்கள் உள்பட தோகைமலை, குறிஞ்சி நகா், வேதாச்சலபுரம், தெற்குபள்ளம், தெலுங்கபட்டி, நாடக்காபட்டி, வெள்ளபட்டி, மேட்டுபட்டி, மூட்டக்காம்பட்டி. கே.துறையூா், கழுகூா், பாதிரிபட்டி, காவல்காரன்பட்டி, நாகனூா், கூடலூா், கல்லடை உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.