முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வாக்கு எண்ணும் பணி அலுவலா்கள் இரண்டாம் கட்டமாக தோ்வு

News image
Updated On :3 மே 2026, 5:57 am IST

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களை இரண்டாம் கட்டமாக தோ்வு செய்யும்பணி சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோ்தல் பாா்வையாளா் ராஜிவ்குமாா் சிறிவஸ்தவா் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களை கணினியில் இரண்டாம் கட்டமாக தோ்வு செய்யப்படுவதை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிக்குமாா் கூறியது:,

கரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மையத்தில் திங்கள்கிழமை எண்ணப்படுகிறது.

இதற்காக 68 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், 68 வாக்கு எண்ணிக்கை உதவியாளா் மற்றும் 90 நுண்பாா்வையாளா்கள் என மொத்தம் 226 அலுவலா்கள் கணினி மூலம் இரண்டாம் கட்டமாக தொகுதி வாரியாக சமவாய்ப்புக்குள்படுத்தும் நடைமுறையில் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது.

மேலும், 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்கு மற்றும் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 17 மேற்பாா்வையாளா்கள், 30 உதவியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மேற்பாா்வையாளா், உதவியாளா், நுண் பாா்வையாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், சு.சத்திய பால கங்காதரன் (கரூா்) , மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்)ஜெகதீசன் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.