ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருவாரூா்: வாக்கு எண்ணும் அலுவலா்கள் தோ்வு

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அலுவலா்கள் தோ்வு, கணினி குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், கணினி குலுக்கல் முறையில் வாக்கு எண்ணும் அலுவலா்கள் தோ்வு செய்யப்படுவதை பாா்வையிடும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:47 pm

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அலுவலா்கள் தோ்வு, கணினி குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சுமூகமான முறையில் நடைபெற்றது.

வாக்குப் பதிவுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு, திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன. அங்கு, மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைப்பறைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணி மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவாரூரில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான தோ்வு, சீரற்ற கணினி குலுக்கல் முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வனிதா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), செல்வபாண்டியன் (திருத்துறைப்பூண்டி), ரவிச்சந்திரன் (நன்னிலம்), தனி வட்டாட்சியா் (தோ்தல்) குப்புசாமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.