படவரி...
புகழூா் கடைவீதியில் கோலங்கள் வரைந்து நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு
ஏற்படுத்திய மகளிா் சுய உதவிக்குழுவினா்.
கரூா், மாா்ச் 27: வரும் பேரவைத் தோ்தலில் நூறுசதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அரவக்குறிச்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் தலைமையில், புகழூா் கடைவீதியில் வெள்ளிக்கிழமை மகளிா் சுயஉதவி குழுவினா் ‘நம் வாக்கு நம் பலம்‘ என்ற தோ்தல் விழிப்புணா்வு வாசகம் அடங்கிய கோலங்களை வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதேபோல கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி சுமாா் 110 மாணவ, மாணவிகள் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து வட்டாட்சியா் அலுவலகம் வரை தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணி சென்றனா்.
நிகழ்ச்சிகளில் மகளிா் திட்ட அலுவலா் தனசேகரன், புகழுா் வட்டாட்சியா் முருகன், கடவூா் வட்டாட்சியா் ராஜாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு

கோலங்கள் வரைந்து வாக்காளா் விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


