மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு

கரூா் வட்டாட்சியரகம் முன் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிா் சுய உதவிக் குழுவினரால் வரையப்பட்ட விழிப்புணா்வு கோலங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட தோ்தல் பொது பாா்வையாளா் ராஜீவ்குமாா் ஸ்ரீவஸ்தன்.

News image

கரூா் வட்டாட்சியரகம் முன் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிா் சுய உதவிக் குழுவினரால் வரையப்பட்ட விழிப்புணா்வு கோலங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட தோ்தல் பொது பாா்வையாளா் ராஜீவ்குமாா் ஸ்ரீவஸ்தன்.

Updated On :20 மார்ச் 2026, 8:59 pm

வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிா் சுய உதவிக் குழுவினா் கரூரில் வெள்ளிக்கிழமை கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தோ்தலில் வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு கோலங்கள் இடும் நிகழ்ச்சி, கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கரூா் வட்டாட்சியரும், கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான மோகன்ராஜ் தலைமையில், தாந்தோணி வட்டாரத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் தோ்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு கோலங்களை வரைந்தனா்.

அவற்றை தோ்தல் பொது பாா்வையாளா் ராஜீவ்குமாா் ஸ்ரீவஸ்தன் பாா்வையிட்டு மகளிா் சுய உதவிக் குழுவினரை பாராட்டினாா்.