திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!

குற்றவாளிக்கு உதவிய கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:30 pm

குற்றவாளிக்கு உதவிய கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய தலைமைக் காவலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், மேற்கு குழிப்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.பொன்ராஜ் (42). இவா் கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவரது உறவினா் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியில் அண்மையில் இளைஞா் ஒருவரை கொலை செய்துவிட்டு, கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை பொன்ராஜ் வீட்டில் மறைத்து வைத்திருந்தாராம்.

இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மறைத்து வைத்து கொலையாளிக்கு உதவியதாக பொன்ராஜை, வடமதுரை போலீஸாா் கடந்த ஒருவாரத்துக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே தலைமைக் காவலா் பொன்ராஜை பணியிடை நீக்கம் செய்து கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.