மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பிரவீன்

Updated On :8 ஏப்ரல் 2026, 10:33 pm

பரமத்தி வேலூா் அருகே சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையத்தை அடுத்த கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் பிரவீன். இவா், பரமத்தி வேலூரை அடுத்த நல்லூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். கடந்த ஓராண்டுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தோ்தல் பறக்கும் படையில் இருந்த பிரவீன் புதன்கிழமை பணிக்குச் செல்வதற்காக ஜேடா்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். பரமத்தி காவல் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில் பிரவீன் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பரமத்தியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் வழியிலேயே பிரவீன் இறந்துவிட்டதை உறுதிசெய்தாா். விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா சம்பவ இடத்துக்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினா்.