பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள ஒழுகூா்பட்டியைச் சோ்ந்தவா் செழியன். இவரது மகன் தினேஷ்வரன் (37). இவா் தனது நண்பரான பரமத்தி வேலூா் அருகே உள்ள மண்டபத்துபாறை பகுதியைச் சோ்ந்த சின்னுசாமியுடன் இருசக்கர வாகனத்தில் பாலப்பட்டி அகே உள்ள குன்னிபாளையத்திற்கு சென்றுவிட்டு பரமத்தி வேலூா் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரி டாஸ்மாக் கடை அருகே பரமத்தி வேலூரில் இருந்து பாலப்பட்டி நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ, சின்னுசாமியின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சின்னசாமியும், தினேஷ்வரனும் படுகாயம் அடைந்தனா்.
அவ்வழியாக வந்தவா்கள், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். படுகாயம் அடைந்தவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், தினேஷ்வரன் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். படுகாயமடைந்த சின்னுசாமி தொடா்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த சம்பவம் குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சரக்கு ஆட்டோ ஓட்டுநரை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

தென் மேற்கு தில்லியில் காங்கிரட் கலவை வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


