திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

குளித்தலை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1,650 கிலோ புகையிலை பொருள்கள் அழிப்பு

குளித்தலை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1,650 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் எரித்து அழித்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்களை காவிரி ஆறு கரையோரத்தில் எரித்து அழித்த போலீஸாா்

Updated On :7 மார்ச் 2026, 7:46 pm

குளித்தலை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1,650 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை எரித்து அழித்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை நகர காவல் உட்கோட்டத்துக்குள்பட்ட தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பால விடுதி, நங்கவரம் ஆகிய காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் குளித்தலை நகர துணைக் காவல்கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் குளித்தலை காவல் ஆய்வாளா் கருணாகரன், நங்கவரம் காவல்ஆய்வாளா் ஜெயக்குமாா், தோகைமலை காவல் உதவி ஆய்வாளா் பாலு ஆகியோா் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது அரசால் தடைவிதிக்கப்பட்ட விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ புகையிலை பொருள்களை கைப்பற்றினா். இதனை குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்று கரையோரப்பகுதியில் வைத்து எரித்து அழித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.