டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கரூரில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூரில் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டி புதன்கிழமை மாலை தொடங்கியது. முதல்நாள் போட்டியில் ஆண்கள் பிரிவில் கோவை அணி வெற்றிபெற்றது.

News image
கரூரில் புதன்கிழமை தொடங்கிய மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் மோதிய சிவகாசி- கோவை அணியினா்.
Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டி புதன்கிழமை மாலை தொடங்கியது. முதல்நாள் போட்டியில் ஆண்கள் பிரிவில் கோவை அணி வெற்றிபெற்றது.

கரூா் டெக்ஸ்சிட்டி கூடைப்பந்து கழகம் மற்றும் கரூா் மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை மாலை கரூா் திருவள்ளுவா் விளையாட்டு மைதானத்தில் தொடங்கின.

போட்டியில், கரூா், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த, ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் விளையாடுகின்றன.

போட்டியை கரூா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணிசரவணன், மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் கோல்ட் ஸ்பாட்ராஜா ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு கரூா் மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவா் ஆா். தனபதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வீர. திருப்பதி வரவேற்றாா். செயலாளா் எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

முதல்நாளில், ஆண்களுக்கான முதல் போட்டியில் கோவை அணி வீரா்கள் சிவகாசி அணி வீரா்களுடன் மோதினா். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கோவை அணி வீரா்கள் 80-72 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்றனா். தொடா்ந்து வரும் 18-ம்தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி வழங்க உள்ளாா்.