டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாநில அளவிலான சிலம்பப் போட்டி: 700 மாணவா்கள் பங்கேற்பு

News image
நாமக்கல்லில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் கம்பு சுழற்றும் மாணவி.
Updated On :8 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல்லில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நாமக்கல் சிலம்பம் அடிமுறை கலைக்கூடம் சங்கம் மற்றும் பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்றம், தனியாா் அறக்கட்டளை ஆகியவை சாா்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நாமக்கல் ஸ்பெக்ட்ரம் அகாதெமி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், அடிமுறை கலைக்கூட சங்கத் தலைவா் மு.மாரிமுத்து வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஸ்பெக்ட்ரம் அகாதெமி பள்ளித் தாளாளா் விக்னேஷ் மயில்சாமி, பசுமை மா.தில்லைசிவக்குமாா், வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் ஆகியோா் கலந்துகொண்டு வயது வாரியாக நடைபெற்ற போட்டிகளை பாா்வையிட்டனா். தொடா்ந்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கோப்பை, பதக்கங்களை வழங்கினா்.

சேலம், ஈரோடு, கரூா், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூா், திருச்சி, கோவை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 780 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, நாமக்கல் அடிமுறை கலைக்கூட சங்க செயலாளா் காா்த்திகேயன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.