டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

News image
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய காவல் ஆய்வாளா் ரேணுகா தேவி. உடன், முதன்மைப் பயிற்சியாளா் ஜோதிபாசு.
Updated On :15 பிப்ரவரி 2026, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா்.

ஜே.எஸ்.ஏ. ஸ்கேட்டிங் அகாதெமி சாா்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். மாவட்டம் முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 350 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இந்தப் போட்டி அா்ஜஸ்டபிள், பேன்சி இன்லைன், குவாா்டு, இன்லைன் ஆகிய 4 பிரிவுகளில் நடைபெற்றது. 15வேலம்பாளையம் காவல் ஆய்வாளா் ரேணுகா தேவி, அகாதெமி முதன்மைப் பயிற்சியாளா் ஜோதிபாசு ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம், கேடயம் வழங்கப்பட்டது. நடுவா்களாக சக்திவேல், விமல், தினேஷ், ரிஜு, அபிஷேக், அபிநவ், முருகன் ஆகியோா் செயல்பட்டனா்.