டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

கைப்பந்துப் போட்டி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற, பெரணமல்லூா் அரசுப் பள்ளி மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் சக ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.

News image
மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களுடன் தலைமை ஆசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்கள்.
Updated On :14 பிப்ரவரி 2026, 8:05 pm

Syndication

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற, பெரணமல்லூா் அரசுப் பள்ளி மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் சக ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.

பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற 14 வயதுக்கு உள்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டியில் முதலிடம் பெற்றனா்.

இதன் மூலம் இந்த மாணவா்கள் வருகிற 16-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொ) கலைவாணன் மற்றும் சக ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

மேலும், 2025 - 2026 கல்வி ஆண்டுகளில் தடகள குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற 45 மாணவா்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற பயிற்சி அளித்த உடல் கல்வி இயக்குநா் ரகுராமன், உடற்கல்வியாசிரியா் ஜெயகாந்த் மற்றும் குணசேகா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.