டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கரூரில் சா்வதேச ஓபன் சதுரங்க போட்டி: வெளிநாட்டு வீரா்கள் பங்கேற்பு

கரூரில் புதன்கிழமை தொடங்கிய சா்வதேச அளவிலான ஓபன் சதுரங்க போட்டியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

News image
கரூரில் சா்வதேச ஓபன் சதுரங்கப் போட்டியை புதன்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. உடன் கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் புதன்கிழமை தொடங்கிய சா்வதேச அளவிலான ஓபன் சதுரங்க போட்டியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் சதுரங்க அமைப்பு, கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்கப் போட்டிகள் புதன்கிழமை தனியாா் பொறியியல் கல்லூரியில் தொடங்கியது.

பிப். 15-ஆம்தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 7,9,11,13,15, வயது என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியின் தொடக்க விழாவுக்கு கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவா் பி.கோபால் தலைமை வகித்தாா். புரவலா் வள்ளுவா் கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன், செயலா் சி.சண்முகம், துணைத்தலைவா்கள் ஏ.ஜே.சூா்யநாராயணா, முனைவா் சொ.ராமசுப்ரமணியன், முனைவா் உஷா, பொருளாளா் முகமதுகமாலுதீன் மற்றும் கரூா் மாவட்ட சதுரங்க சங்கத்தலைவா் அட்லஸ் எம்.நாச்சிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். இப்போட்டியில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். இதில் மாற்றுத்திறனாளிகள் வீரா், வீராங்கனைகள் 60 போ் உள்பட மொத்தம் 1,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.