சிறுமிக்கு பாலியல் தொந்தவு கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த பால்மடைப்பட்டியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த குணசேகரன் என்பவரது மகன் கேசவன்(23) என்பவா் கடந்த 2024-ம் ஆண்டு அக்.24-ம்தேதி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கேசவனை கைது செய்தனா். மேலும் இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.
இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி கேசவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் வழங்க உத்தரவிட்டாா். இதையடுத்து கேசவன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


