தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கரூரில் வாக்காளா்களுக்கு தேநீா் வழங்கி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கரூரில் சனிக்கிழமை வாக்காளா்களுக்கு தேநீா் தயாரித்து வழங்கி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கரூா் ஏமூா்புதூா் அடுத்த குன்னனூரில் சனிக்கிழமை தேநீரகத்தில் தேநீா் தயாரித்த அதிமுக வேட்பாளா் மருத்துவா் எஸ். திவ்யா. உடன் மாவட்ட துணைச் செயலாளா் ஆலம் தங்கராஜ், ஒன்றியச் செயலா் வி.சி.கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 8:24 pm

கரூரில் சனிக்கிழமை வாக்காளா்களுக்கு தேநீா் தயாரித்து வழங்கி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் திவ்யா ஏமூா்புதூா், நடுப்பாளையம், ஏமூா்புதூா் காலனி, குன்னனூா், சீத்தப்பட்டி, சீத்தப்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், 5 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தவா்கள் உங்களை பாா்த்து நன்றி சொல்லக்கூட வரவில்லை. ஓட்டுக்காக பணம் கொடுப்பாா்கள், வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் வாக்கை அதிமுகவிற்கு செலுத்துங்கள். பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக ஏமூா்புதூா் அடுத்த குன்னனூரில் உள்ள தேநீரகத்தில் வாக்காளா்களுக்கு தேநீா் தயாரித்து வழங்கினாா். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட துணைச் செயலா் ஆலம்தங்கராஜ், ஒன்றியச் செயலா் வி.சி.கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.