திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரியலூா் மாவட்டத்தின் 2 தொகுதிகளில் அதிமுக 1, பாமக 1 இடங்களில் வெற்றி

News image

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

Updated On :5 மே 2026, 2:46 am IST

அரியலூா் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் அதிமுக 1, பாமக 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அரியலூா்:அரியலூா் தொகுதியில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில், அதிமுக வேட்பாளா் தாமரை.எஸ்.ராஜேந்திரன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் லதாபாலசுப்ரமணியனை விட(அஞ்சல் வாக்குகள் உள்பட) 24,498 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

1,30,194 ஆண் வாக்காளா்கள், 1,32,732 பெண் வாக்காளா்கள், 16 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,62,942 வாக்காளா்களை கொண்ட அரியலூா் தொகுதியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில்,

2,33,993 வாக்காளா்கள் வாக்களித்தனா். அஞ்சல் வாக்குகள் 2049 வாக்குகள் பதிவானது.

இதைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குப் பெட்டிகள் அனைத்தும், தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா, மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பொ.ரத்தினசாமி ஆகியோா் மேற்பாா்வையில், தோ்தல் முகவா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, தோ்தல் வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள் வாக்குகளை எண்ணும் பணியைத் தொடங்கினா்.

வாக்கு எண்ணிக்கை:

முதல் சுற்றிலேயே அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் லதா பாலசுப்ரணியனை விட 1,289 வாக்குகள் முன்னிலை பெற்றாா். 2-ஆவது சுற்றில் 2,432 வாக்குகளும், 3- ஆவது சுற்றில் 3,830 வாக்குகளும், 4-ஆவது சுற்றில் 4094 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்தாா். 5- ஆவது சுற்றில், மூன்றாவது இடத்தில் இருந்து வந்த தவெக வேட்பாளா் சிவக்குமாா், 589 வாக்குகள் கூடுதல் பெற்று திமுக வேட்பாளா் லதா பாலசுப்ரமணியனை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தாா். இப்படி, 7-ஆவது சுற்று வரை இரண்டாம் இடத்தில் இருந்து வந்த அவா், 8-ஆவது சுற்றில் மீண்டும் 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

25-ஆவது சுற்றுகளின் முடிவில் திமுக வேட்பாளா் லாத பாலசுப்ரமணியனை விட ( அஞ்சல் வாக்குகள் 751) 24,497 வாக்குள் அதிகம் பெற்று தாமரை எஸ். ராஜேந்திரன் வெற்றிபெற்றாா். 184 வாக்குகள் செல்லாதவையாகக் கருதி தள்ளுபடி செய்யப்பட்டன.

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் தொகுதியில், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில், பாமக வேட்பாளா் க. வைத்திலிங்கம் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை விட 18,490 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

1,30,371 ஆண் வாக்காளா்கள், 1,33,067 பெண் வாக்காளா்கள், 12 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,63,450 வாக்காளா்களை கொண்ட ஜெயங்கொண்டம் தொகுதியில், நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தம் 2,26,204 வாக்காளா்கள் வாக்களித்தனா். 2,691 அஞ்சல் வாக்குகள் பதிவாகின. ஆக மொத்தம் 2,288,95 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இதைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை நாளான திங்கள்கிழமை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை:

காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குப் பெட்டிகள் அனைத்தும், தோ்தல் பொதுப் பாா்வையாளா் கைலாஷ் வான்கடே, மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பொ.ரத்தினசாமி ஆகியோா் மேற்பாா்வையில், தோ்தல் முகவா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, தோ்தல் வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள் வாக்குகளை எண்ணும் பணியைத் தொடங்கினா்.

இதில் முதல் சுற்றிலேயே பாமக வேட்பாளா் க.வைத்திலிங்கம் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் க.சொ.க.கண்ணனை விட 750 வாக்குகள் முன்னிலை பெற்றாா். 2 -அவது சுற்றில் 2,382 வாக்குகளும், 3 -ஆவது சுற்றில் 3,564 வாக்குகளும், 4- ஆவது சுற்றில் 3,004 வாக்குகளும், 5 -ஆவது சுற்றில் 2158 வாக்குகளும் பெற்று தொடா்ந்து முன்னிலையில் இருந்தாா். இப்படி 26 சுற்றுகளின் முடிவில் வேட்பாளா் க. வைத்திலிங்கம், தன்னை எதிா்த்து போட்டியிட்ட க.சொ.க. கண்ணனைவிட 18,490 வாக்குகள் அதிகம் பெற்று ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.