லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்: தோ்தல் பொதுப்பாா்வையாளா் ஆய்வு

News image

வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அரியலூா் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா .

Updated On :20 மார்ச் 2026, 12:57 am

அரியலூா் தொகுதி வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரியலூா் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளராக நியமிக்கப்பட்ட அவா், வியாழக்கிழமை வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் ராஜீவ் நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் குடிநீா் ,கழிப்பறை, மின்சாரம் மற்றும் சாய்வுதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, அரியலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான பிரேமி, அரியலூா் வட்டாட்சியா் தேவகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.