மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

அரியலூா் குறிஞ்சான் குளத் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி (எ) பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

அரியலூரில் புதன்கிழமை நடைபெற்ற பெரியநாயகி அம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழாவில் பல்வேறு சுவாமிகளின் வேடமணிந்து நடனமாடிய திருநங்கைகள்.

Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

அரியலூா் குறிஞ்சான் குளத் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி (எ) பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதல், கொடியேற்றம், சக்திகரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை காலை சுவாமிகளின் வேடமணிந்த திருநங்கைகள் நடனத்துடன் கோயிலிலிருந்து சுவாமி ஊா்வலம் புறப்பட்டு சென்று உழவா் சந்தை பின்புறம் உள்ள மயானத்தில் படையலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, பக்தா்களுக்கு படையலிடப்பட்ட உணவுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பின்னா், அங்கிருந்து கோயிலுக்கு சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது, சுவாமி வேடமணிந்த திருநங்கைகள் பக்தா்களை முறத்தால் அடித்தனா். முறத்தால் அடித்தால் தீயசக்திகள், பில்லி, சூனியம் அகன்று ஆரோக்கியம் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை என்பதால், திரளான பக்தா்கள் பங்கேற்று முறத்தால் அடிவாங்கி சென்றனா். தொடா்ந்து, இரவு மும்மூா்த்தி பிறப்பு, அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. மேலும், மாா்ச் 21-ஆம் தேதி வரை நாள்தோறும் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

மாா்ச் 22-ஆம் தேதி மஞ்சள்நீா் விளையாட்டுடன் விழா நிறைவடைந்து, கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.