லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிலால், குமிளங்குழியில் துணை மின் நிலையம் கட்டும் பணிக்கு அமைச்சா் அடிக்கல்

News image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குமிளங்குழியில் துணை மின் நிலையம் கட்டும் பணியை சனிக்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

Updated On :14 மார்ச் 2026, 8:32 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சிலால் மற்றும் குமிளங்குழியில் துணை மின் நிலைய கட்டுமானப் பணிக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

சிலால் மற்றும் குமிளங்குழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சா் சா.சி. சிவசங்கா், ரூ.13.77 கோடி மதிப்பீட்டில் இரண்டு மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, வானதிரையன்பட்டினம் ஊராட்சியில், தேவாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சேவை சங்கம் கிளை அலுவலத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி, கிளை செயல்பாட்டைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், செந்துறை ஊராட்சி அம்பேத்கா் நகரில் ரூ.39.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா் வாய்க்கால்களுடன் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், ரூ.14.5 மதிப்பீட்டில் தாா்ச் சாலை அமைக்கும் பணியையும் தொடங்கிவைத்து, பணிகளை உரிய காலத்துக்குள் தரமான கட்டுமானப் பொருள்களைக் கொண்டு விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக அவா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை பேருந்து நிலையங்களில் இருந்து 19 பேருந்துகள் தடமாற்றம் மற்றும் தடநீடிப்பு சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் மனோகரன், வட்டாட்சியா்கள் ஜெயங்கொண்டம் ஆனந்தன், செந்துறை கோவிந்தராஜ், போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.