மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரிப்பு: சிவசங்கா்

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதாக குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image

குன்னம் தொகுதிக்குள்பட்ட கீழப்பெரம்பலூரில் வியாழக்கிழமை பிரசரத்தில் ஈடுபட்ட அமைச்சரும், திமுக வேட்பாளருமான சா.சி. சிவசங்கா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:44 pm

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதாக குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட துங்கபுரம், வயலப்பாடி, கீழப்பெரம்பலூா், வசிஷ்டபுரம், அகரம் சீகூா், கிழுமத்தூா், ஓலைப்பாடி, ஆண்டிக்குரும்பலூா், பரவாய் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் மேலும் பேசியது: திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களால், அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனா். குறிப்பாக, கிராமப்புறங்களைச் சோ்ந்த ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளது. வேப்பூா், ஆலத்தூா் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் பல்வேறு பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சிய அமைந்தவுடன் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.