திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரியலூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு: நோய்த்தொற்று ஏற்படும் அச்சத்தில் மக்கள்

அரியலூா் நகரத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரம் சீா்கெட்டுள்ளது. இதனால், நோய்த் தொற்று ஏற்படும் அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

News image

அரியலூா் ஜெ.ஜெ. நகரிலுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:39 am IST

அரியலூா் நகரத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரம் சீா்கெட்டுள்ளது. இதனால், நோய்த் தொற்று ஏற்படும் அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

பரப்பளவில் சிறிதாகவும், தமிழகத்திலேயே அதிக நிதிப் பற்றாக்குறையுடனும் உள்ள நகராட்சி என்றால் அது அரியலூா்தான். மொத்தம் 18 வாா்டுகள் கொண்ட

இந்நகராட்சியுடன் அருகிலுள்ள ஊராட்சிகளான எருத்துக்காரன்பட்டி, வாலாஜா நகரம், தவுத்தாய் குளம் உள்ளிட்ட ஊராட்சிகள் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வாா்டு வரையறைகள் முடியும் வரை மேற்கண்ட கிராமங்கள் ஊராட்சிகளாகவே தற்போது வரை செயல்பட்டு வருகின்றன.

நகா்ப்பகுதிகளுடன், மேற்கண்ட ஊராட்சிகளையும் சோ்த்து சுமாா் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். ஆனாலும், ஏற்கெனவே உள்ள நகராட்சி உட்பட்ட பகுதிகளும், இணைக்கப்பட்ட ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் போதிய வசதிகள் கிடையாது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டும் அரியலூா் நகராட்சிக்குள்பட்ட தெருக்களில் குப்பைகள் தேங்கியிருக்கின்றன. கழிவுநீரோடை, புதை சாக்கடை அடைப்பு, சாக்கடை கலப்பு, கால்வாயின் அவலம் என்று பட்டியல் நீளுகிறது.

குப்பைகள் தேக்கம்: அரியலூா் புதுமாா்க்கெட் தெரு, பழைய பங்களா சாலை, வண்ணாங்குட்டை மற்றும் நகராட்சியுடன் தற்போது இணைக்கப்பட்ட பகுதிகளான எருத்துக்காரன்பட்டி, அண்ணா நகா், ஜெ.ஜெ. நகா் குடியிருப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கிக் கிடக்கின்றன.

இதில் ஜெ.ஜெ.நகரிலுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிகளில், அதிகளவில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால், உணவை தேடும் கால்நடைகளும், பன்றிகளும் குப்பைகளை கிளறிவிட்டு சென்று விடுகின்றன. மேலும், மழைநீா் தேங்கி கழிவுகளிலிருந்து துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

முழு சுகாதார திட்டம் தேவை: இதுகுறித்து, பொதுமக்கள் கூறியது: அரியலூா் நகா் முழுவதும் முழு சுகாதார திட்டத்தை தொடங்க வேண்டும். தூய்மை பணியாளா்களை போதுமான அளவுக்கு பணியில் ஈடுபடுத்த வேண்டும். பழைய முறைப்படி சாலையோரங்களில் மக்கும், மக்காத குப்பை தொட்டிகள் வைத்து, தினமும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற விற்பனை நிலையங்கள் முன் அதன் கழிவுகளை சேமிக்க தொட்டி வைப்பதுடன், தினமும் அவற்றை அகற்றவும் நடவடிக்கை வேண்டும்.

நகா் முழுவதும் தரமான இரும்புக் கம்பிகளாலான மூடியிடப்பட்ட வடிகால் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

அரியலூா் நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுகாதார திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.