திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே கள்ள சந்தையில் அரசு மது விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது முகவனூா் கிராமம், டேம் நால் ரோடு அருகே, கள்ளச் சந்தையில் மது விற்ற பெரிய அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த மைக்கேல் மகன் ரத்தினம் (65) என்பவரைப் பிடித்து, அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வழக்கு பதிந்த வையம்பட்டி போலீஸாா், ரத்தினத்தை கைது செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








