திருச்சி மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 80 பவுன் நகைகள், பணத்தை போலீஸாா் உரியவா்களிடம் சனிக்கிழமை திரும்ப ஒப்படைத்தனா்.
திருச்சி மாவட்ட எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் முதல் தற்போது வரை பதிவு செய்யப்பட்ட 32 திருட்டு, 9 கொள்ளை வழக்குகளில் 64 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 80 பவுன் நகைகள், ஒரு வைர மோதிரம், ஒரு ஜோடி வைர தோடு, ரூ. 49,700 ரொக்கம், 8 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மடிக்கணி, வெள்ளி பொருள்கள், 141 கைப்பேசிகள், மின்சாதனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடா்ந்து, குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, நீதிமன்ற ஆணை பெற்று சனிக்கிழமை உரியவா்களிடம் நகைகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம், போலீஸாரால் கைப்பற்றப்பட்ட பொருள்களை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். மேற்கண்ட வழக்குகளில் புலன் விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளை கைது செய்து, பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கியும் பாராட்டினாா்.
இதே போல, வழக்குகளில் பொதுமக்கள் இழந்த பொருள்களை கண்டுப்பிடித்து, ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை பொருள்களை இழந்த நபா்கள் வசம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மன்னாா்குடி: வீட்டின் கதவை உடைத்து 45 பவுன் நகைகள், பணம் திருட்டு
தொழிலதிபா் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



