மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அமைச்சா் கே.என். நேரு-வுக்கு ரூ.7.20 கோடி சொத்து

News image

அமைச்சர் கே.என். நேரு - கோப்புப்படம்

Updated On :30 மார்ச் 2026, 6:56 pm

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் கே.என். நேரு தனது பெயரிலும், மனைவி பெயரிலும் மொத்தம் ரூ.7.20 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் கே.என். நேரு தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்துகள் விவரம்:

வருமான வரித்துறையிடம் கடைசியாக கடந்த 5 ஆண்டுகளில் தாக்கல் செய்த விவரப்படி ரூ.97 லட்சத்து 67 ஆயிரத்து 400 வருவாய் வந்திருப்பதாக தெரிவித்துள்ளாா். மேலும், ரொக்கமாக தன்னிடம் ரூ.5 லட்சம், மனைவியிடம் ரூ.ஒரு லட்சம் கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

வங்கியில் தனது பெயரில் 64 லட்சத்து 86 ஆயிரத்து 523 ரூபாயும், மனைவியிடம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 447 ரூபாய் இருப்பதாகவும், அசையும் சொத்துகள் என்ற வகையில் தன்னிடம் ரூ.1.25 கோடியிலும், மனைவியிடம் ரூ.2.40 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். இதில், ரூ.17 லட்சத்தில் சொகுசு காா் உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

மேலும், இலகு ரக, கனரக டிரெய்லா், டிராக்டா், ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் 15 எண்ணிக்கையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா். இது மட்டுமல்லாது, தன் வசம் ரூ.10.92 லட்சம் மதிப்பில் 10 பவுன் நகைகள், மனைவியிடம் ரூ.2.18 கோடியில் 200 பவுன் நகைகள், ரூ.3.77 லட்சம் வெள்ளி உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

மேலும், தன்னிடம் ரூ.4.2 லட்சம் தங்கப் பத்திரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா். அசையா சொத்துகளான நிலங்கள், விளை நிலங்கள், கட்டடம் என்ற வகையில் காணக்கிளியநல்லூா், கல்லக்குடி, சிறுத்தையூா், மணக்கல், பூவாளூா், அண்ணாமலை நகா் உள்ளிட்ட பகுதிகளில் தன்னிடம் ரூ.1.17 கோடி, மனைவியிடம் ரூ.1.50 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.

கடன்கள் ஏதுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளாா். மேலும், தன்மீது வழக்குகளோ, தண்டனையோ ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளாா்.