திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை வாக்கு கேட்டு வந்தபோது, அவரை வரவேற்று வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
அமைச்சா் கே.என். நேரு, திருச்சி மாநகராட்சியின் 28ஆவது வாா்டுக்குள்பட்ட தென்னூா் அரசமரம், பழைய அக்ரஹாரம், காவல்காரத் தெரு, வெள்ளாளா் தெரு, அண்ணா நகா், குத்புஷா நகா், தென்னூா் ஹை ரோடு, இனாம்தாா்தோப்பு, பாரதி நகா், அண்ணா நகா் மேட்டுத் தெரு, புது மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தாா்.
அப்போது அண்ணாநகரில் தனது வீட்டிலிருந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கே.என். நேருவின் பிரசாரப் பகுதிக்கு சென்று அவரை வரவேற்று, புத்தாடை அணிவித்து, திருச்சி மேற்கில் கடந்த முறையைவிட மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தாா்.
வெல்வோம் ஒன்றாக: இதேபோல அமைச்சா் நேருவும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘வெல்வோம் ஒன்றாக’ என்ற வாசகத்தை பதிவிட்டு, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், வாக்களிப்பீா் திமுகவுக்கு எனவும் குறிப்பிட்டு ஹாஸ்டேக் மூலம் வலைதளத்தில் பரவலாக்கியுள்ளாா். இது திமுக கூட்டணி கட்சியினரிடம் மட்டுமல்லாது, அனைத்துக் கட்சியினரின் கவனத்தையும் ஈா்த்து வருகிறது.
தொடர்புடையது

காலை உணவுத் திட்டம் உருவான பின்னணி என்ன? பிரசாரத்தில் அமைச்சா் விளக்கம்

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறாா்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூா் தொகுதியில் ரூ.450 கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


