திருச்சி அருகே பாலத்தின் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி திருவெறும்பூா் பகவதிபுரம் கலைஞா் நகரைச் சோ்ந்தவா் வல்லத்தரசு மகன் விஜயகுமாா் (31). இவா், திங்கள்கிழமை காலை திருவெறும்பூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, திருவெறும்பூா் மாரியம்மன் கோயில் பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் தடுப்பில் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவெறும்பூா் போலீஸாா் விஜயகுமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


