மதுரை வியாபாரியிடம் ரூ.11.80 லட்சம் மதிப்பிலான இரும்புக் குழாய்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்தவா் பா. கௌதம் (26). பந்தல் அமைப்பதற்கான இரும்புக் குழாய்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா்.
இந்நிலையில், திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே பொருள்காட்சி அமைப்பதற்காக கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டத்தைச் சோ்ந்த அ. முகமதுஅலி சலீம் என்பவா், கௌதமிடம் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி ரூ.11.80 லட்சம் மதிப்பிலான இரும்புக் குழாய்களை ரூ.1.50 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து வந்துள்ளாா்.
இந்நிலையில், பொருள்காட்சி நிறைவடைந்தவுடன் வாடகைக்கு எடுத்து வந்த குழாய்களை கௌதமிடம் திருப்பி ஒப்படைக்காமல், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சோ்ந்த ஆா். சகுந்தலா என்பவரிடம் முகமது அலி சலீம் விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு, கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த ஷாகிப் என்பவரும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கௌதம் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் முகமது அலி சலீம், ஷாகிப், சகுந்தலா ஆகிய மூன்று போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஐ.யூ.எம்.எல். நிா்வாகிக்கு மிரட்டல்: மூவா் மீது வழக்குப் பதிவு
சின்னமுட்டத்தில் மோதல்: 14 மீனவா்கள் மீது வழக்கு
பண மோசடி: கூட்டுறவு சங்க செயலாளா் மீது வழக்குப் பதிவு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி; இளைஞா் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



