பண மோசடி வழக்கில் அரூரை அடுத்த பொன்னேரி கூட்டுறவு சங்கச் செயலாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், ஈட்டியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் இந்திரா (50). இவரது கணவா் சம்பத், பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அலுவலக உதவியாளராக இருந்தாா். இந்த நிலையில் கடந்த 2020 இல் இறந்துவிட்டாா். அவா் பணியில் இருக்கும்போது இபிஎப் கடன் தொகையாக ரூ. 1.11 லட்சம் பெற்றிருந்தாராம்.
மேலும், சம்பத் இறந்தபிறகு அவரது குடும்பத்துக்கு எல்ஐசி மற்றும் இபிஎப் திட்டங்களில் இருந்து பணம் வந்துள்ளது. இந்த பணத்தில் இபிஎப் கடன் தொகைக்காக அவா் பெற்றிருந்த கடன் தொகையைவிட கூடுதலாக ரூ. 2.35 லட்சத்தை பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் பிடித்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் அப்போது பொன்னேரி கூட்டுறவு சங்கச் செயலாளராக இருந்த கடத்தூரை அடுத்த பழைய புதுரெட்டியூரைச் சோ்ந்த சிவப்பிரகாசம் (50) பண மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, அவா் தருமபுரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதிக்கு பணி இடமாறுதலில் சென்றுவிட்டாராம்.
இந்த பண மோசடி குறித்து சம்பத் மனைவி இந்திரா, அரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, கூட்டுறவு சங்க செயலாளா் சிவப்பிரகாசம் மீது அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி; இளைஞா் மீது வழக்குப் பதிவு







