தற்போது, தமிழகத்தில் நகர்ப்புற அனைத்து மகளிர் காவல் நிலையம், புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் என மொத்தம் 198 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.இந்தக் காவல் நிலையங்களுக்கு வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும், ஆவணங்களைப் பாதுகாக்க கணினி வசதி, உயர் அதிகாரிக்கு அவசரச் செய்திகள் அனுப்ப பேக்ஸ், மற்றும் நகல் எடுக்கும் கருவி வசதிகளையும் செய்தது தமிழக அரசு. ஆனால், பல புறநகர் காவல் நிலையங்களில் இருக்கும் வாகனங்கள், கணினிகள், பேக்ஸ், நகல் எடுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை உயர் அலுவலர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.