ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அடிப்படை வசதிகள் இன்றி வாழும் கிராம மக்கள்

திருவெ றும் பூர், ஜூன் 25:   நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுக ளுக்கு மேலாகி யும், அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரு கின்றனர் தொண்டை மான்பட்டி கிராம மக்கள்.   திருச்சி மாவட்டம், திருவெ றும் பூரை அடு

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:26 pm

சி.சண்முகவேல்

திருவெ றும் பூர், ஜூன் 25:   நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுக ளுக்கு மேலாகி யும், அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரு கின்றனர் தொண்டை மான்பட்டி கிராம மக்கள்.

  திருச்சி மாவட்டம், திருவெ றும் பூரை அடுத்த அரசங் குடி ஊராட் சிக்கு உள்பட்டது தொண்டை மான்பட்டி கிராமம். திருவெ றும் பூரிலி ருந்து கூத் தைப் பார் கிளி யூர் செல் லும் சாலை யில் உள்ளது இந்தக் கிராமம். இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இவர்க ளில் பெரும்பாலா னோர் குடிசை வீடுக ளில் தான் வசித்து வருகி றார்கள்.

    இதுவரை இந்தப் பகு திக்கு அர சின் தொகுப்பு வீடுகள் வந்த தில்லை. குடி நீர், சுகா தார மையங்கள், சாலை வசதிகள் உள் ளிட்ட எந்த வித அடிப்படை வசதிக ளும் கிடை யாது.

  இந்தக் கிராமத் திற் குச் செல்ல பேருந்து நிறுத்தத்திலி ருந்து ஒரு கி.மீ. வயல் வரப்புக ளின் மேல் நடந்து செல்ல வேண் டும். வயல்க ளில் நடவு நட்டு விட் டால் பயிர்கள் மீது நடந்து செல்ல வேண் டும்.

  இப்படி எந்த வித அடிப்படை வசதிக ளும் இல்லாமல் வாழ்ந்து வரும் இப் பகுதி மக்க ளுக்கு, அரசு இதுவரை எந்தவித மான வளர்ச் சித் திட்டங்களை யும்   அமல்ப டுத்த வில்லை என்று குற்றம் சாட்டு கின்றனர் இப் பகுதி மக்கள்.

  இதுகு றித்து இந்தக் கிராம மக்கள் கூறியது:

  இந்தப் பகுதி அரசங் குடி ஊராட் சிக் குள்பட்ட பகுதியா கும். தேர்தல் நேரத் தில் இங்கு வரும் அரசியல் கட் சித் தலைவர்கள், ஊராட் சித் தலைவர் உள் ளிட் டோர் அடிப்படை வசதிகள் நிறை வேற்றப்ப டும் என்று உறுதிய ளிக் கின்றனர். ஆனால், தேர்த லுக் குப் பிறகு இந்தப் பக்கம் யாரும் வருவ தில்லை.

   அண்மை யில் தெரு வில் சிமென்ட் சாலை அமைத் தார்கள். ஆனால், அந்தச் சாலை ஒரு மாதத் தில் பெயர்ந்து விட்டது.  ஊருக்கு சாலை வசதி இல்லாதது பெரும் சிரம மாக உள்ளது. பேருந்து நிறுத்தத் துக் குச் செல்ல 1 கி.மீ.  வயல் வரப்புக ளைக் கடந்து செல்ல வேண் டும்.

   கோடை காலங்க ளில் வயல்கள் தரி சாக இருக் கும். அத னால், சிரமம் இல்லை. ஆனால், வயல்க ளில் பயிர்கள் நட்டு விட் டால், பயிர்களை மிதித் துச் செல்ல வேண் டும். அப் போது நில உரிமையாளர்க ளின் கோபத் துக்கு ஆளாக நேரிடுகிறது. மேலும், இங் குள்ள மயானத் திற் குச் செல்ல வும் பாதை கிடை யாது.

   பேருந்து நிறுத்தத்திலி ருந்து கிராமத் திற்கு செல்ல நிலம் உரிமையாளர்களிடம் பேசி சிறிதளவு நிலத் தைப் பெற்று, சாலை வசதி செய்து தரக் கோரி, அப்போ தைய மாவட்ட  ஆட்சிய ராக இருந்த மூர்த்தியிடம் மனு அளித் தோம். அவ ரும், இது தொடர் பாக நடவ டிக்கை எடுப்ப தாக உறுதிய ளித் தார். ஆனால், இன்றுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவ டிக்கை யும் எடுத்ததாகத் தெரிய வில்லை.

   மேலும், இப் பகு திக்கு சாலை வசதி செய்து தரக் கோரி கம்யூ னிஸ்ட் கட்சியினர் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால், இதுவரை அரசு செவி சாய்க்க வில்லை. ஊராட் சித் தலைவர் எங்கள் ஊருக்கே வருவ தில்லை என் றும் குறை கூறு கின்றனர் இப் பகுதி மக்கள்.

  எனவே, இனி யும் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நிர்வாகம் தொண்டை மான்பட்டி யில் அடிப்படை வசதிக ளைச் செய்து தர நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்பதே இப் பகுதி மக்க ளின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.