திருவெறும்பூர், டிச. 28: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், பாப்பாக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல நாள்களாக குப்பைகள் அகற்றப்படாததாலும், தேங்கிக் கிடக்கும் மழை நீராலும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 10,000-க்கும் அதிகமானோர் வசித்து வரும் இந்தப் பகுதியில் கடந்த பல நாள்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை. மேலும், அண்மையில் பெய்த மழையால் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேங்கிக் கிடக்கும் மழை நீரை வடியச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
காட்டூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பிரதான சாலை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக் கடை, ஆயில் மில் பர்மா காலனி நியாய விலைக் கடை, எல்லக்குடி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் மலை போலக் குவிந்து கிடக்கின்றன. இதனால், இந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
இதேபோல, சேரன்நகர், சோழன்நகர், அண்ணாநகர், எம்ஜிஆர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் இன்னும் வடியாமல் தேங்கிக் கிடக்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்களால் இந்தப் பகுதி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல, பன்றிகள் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால், மலேரியா காய்ச்சால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் இந்தப் பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களில் அண்மைக்காலமாக நாள்தோறும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இதேபோல, பாப்பாக்குறிச்சி ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாததால், மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாகக் காணப்படுகிறது. இதனிடையே, குப்பைகளை அகற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு நூதனப் போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேபோல, சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வடியச் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி சேரன்நகர், சோழன்நகர், அண்ணாநகர் பகுதி மக்கள் அளித்த மனுவுக்கும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, தொற்று நோய் பாதிப்பு தீவிரமாவதற்கு முன்னதாக குப்பைகளை அகற்றவும், சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வடியச் செய்யவும், சுற்றித் திரியும் பன்றிகளைக் கட்டுப்படுத்தவும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

