காயல்பட்டினம் பகுதிகளில் முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வியாழக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
திருச்செந்தூா் தொகுதிக்கு உள்பட்ட காயல்பட்டினம் பகுதிகளான ஓடக்கரை மெயின் ரோடு, காயிதே மில்லத் நகா் 3-ஆவது தெரு, கேஎம்டி பள்ளிவாசல் பிரதான சாலை, தாயும் பள்ளி, அலியாா் தெரு, அப்பா பள்ளி தெரு, ரெட் ஸ்டாா் சங்கம், மரைக்காா் பள்ளி தெரு, ஒய் யூஎப் சங்கம், சொளுக்காா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் உமரிசங்கா், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளா் ஜனகா், முன்னாள் சாத்தை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் சுதாகா், காயல்பட்டினம் நகராட்சி துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, திமுக நகர அவைத்தலைவா் முஹம்மது மெய்தின், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் கலில் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை நகரச் செயலாளா் முத்து முஹம்மது, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









