போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தூத்துக்குடியில் டிஜிட்டல் பதாகைகளால் விபத்து அபாயம்: மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகாா்

News image

மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துவிட்டு வந்த பாஜகவினா்.

Updated On :14 மே 2026, 3:08 am IST

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகைகளை உடனடியாக அகற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சியினா் மாநகராட்சி ஆணையரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக, பாஜக தூத்துக்குடி கிழக்கு மண்டலத் தலைவா் ராஜேஷ் கனி தலைமையில் அளிக்கப்பட்ட மனு:

தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கியச் சந்திப்புகள், சாலையோரங்கள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகைகள் வாகனங்கள் சாலையில் செல்வதை மறைக்கும் வகையில் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் பதாகைகளையும் மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, மண்டல துணைத் தலைவா் ஜெயரூபி, மண்டலச் செயலா் விஜயன், ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஓம் பிரபு, மாவட்டச் செயலா் ஐயப்பன், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.