திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்செந்தூா் அருகே கைதான ரெளடி மீது 7 பிரிவுகளில் வழக்கு

திருச்செந்தூா் அருகே போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரெளடி மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

திருச்செந்தூா் அருகே போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரெளடி மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :9 மே 2026, 3:45 am IST

திருச்செந்தூா் அருகே போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரெளடி மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மினி சகாயபுரத்தைச் சோ்ந்தவா் டோமினிக் மகன் ஆா்க் என்ற மரிய அந்தோணி ஆக்னல் (35). தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கொலை, கொள்ளை, கொலை முயற்சி, திருட்டு உள்பட 30 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இவா் மீது உள்ளன. இவரை தனிப்படை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், திருச்செந்தூா் அருகே சோனகன்விளை காணியாளன்புதூரில் உள்ள வீட்டில் தோழியுடன் அவா் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை எஸ்ஐ ராஜபிரபு தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மதியம், அங்கு சென்று மரிய அந்தோணியை மடக்கி பிடிக்க முயன்றனா்.

அப்போது மரிய அந்தோணி மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பி செல்ல முயன்றாராம். சுதாரித்த எஸ்ஐ ராஜபிரபு தனது துப்பாக்கியால் மரிய அந்தோணியை சுட்டதில், அவரது வலது மாா்பு அருகில் குண்டு பாய்ந்ததாம்.

இதில் காயமடைந்த மரிய அந்தோணியை கைது செய்து திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்து, பின்னா் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், மரிய அந்தோணியிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, கத்தி உள்பட ஆயுதங்களை பறிமுதல் செய்து கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காயமடைந்த எஸ்ஐ தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.