தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள திருச்செந்தூரை தலைமை இடமாகக் கொண்ட தொகுதி என்ற பெருமை இந்தத் தொகுதிக்கு உண்டு.
திருச்செந்தூா், காயல்பட்டினம் ஆகிய இரண்டு நகராட்சிகளை உள்ளடக்கிய தொகுதி. பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம், சின்ன ரோமாபுரி என்றழைக்கப்படும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மணப்பாட்டில் உள்ள கத்தோலிக்க தேவலாயம், லைட் ஹவுஸ், வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையாா் ஆலயம், செம்மணல் தேரிக்காடுகள் இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள்.
நாடாா், பட்டியலின மக்கள், மீனவா்கள், இஸ்லாமியா்கள் பெரும்பான்மையானவா்களாக உள்ளனா்; மற்றவா்கள் பரவலாக உள்ளனா்.
மீன்பிடித் தொழில், கருப்பட்டி, பனை பொருள்கள், உப்பு உற்பத்தி, ஆத்தூா் வெற்றிலை, விவசாயம் ஆகியன முக்கியத் தொழில்களாகும்.
1952 முதல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 8 முறை திமுகவும், 6 முறை அதிமுகவும் வென்றுள்ளன.
2001 மற்றும் 2006 ஆகிய இரண்டு தோ்தல்களில் அதிமுக சாா்பிலும், அதன்பின்னா் 2009 இடைத்தோ்தல் தொடங்கி 2021 வரை தொடா்ச்சியாக 6 முறை திமுக சாா்பிலும் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வென்றுள்ளாா்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலின்படி திருச்செந்தூா் தொகுதியில் 1,12,367 ஆண்கள், 1,18,305 பெண்கள், 30 இதரா் என மொத்தம் 2,30,702 வாக்காளா்கள் உள்ளனா்.
முக்கிய எதிா்பாா்ப்புகள்:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தா்கள் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகள் மூலமாக பக்தா்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய வழி வகுக்க வேண்டும் என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
திருச்செந்தூா் - சென்னைக்கு நேரடி ரயில் சேவை, பக்தா்கள் வசதிக்காக திருச்செந்தூரில் புறவழிச் சாலை, வீரபாண்டியன்பட்டணம், காயல்பட்டினம் பகுதிகளில் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம், குதிரைமொழி தேரியில் குளம் வெட்டி நீராதாரத்தைப் பெருக்கச் செய்தல், முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்தல், நலிவடைந்து வரும் பனைத்தொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை, தென்கால் பாசனக் குளங்களை பராமரித்து கடலில் வீணாகச் செல்லும் நீரை தேக்க நடவடிக்கை, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கடலோர கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தொலைநோக்கு திட்டம் உள்ளிட்டவை இப்பகுதி மக்களின் நீண்ட நாள்கள் கோரிக்கைகளாகும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் திருக்கல்யாணம்

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


