மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

News image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள். - (கோப்புப் படம்)

Updated On :15 மார்ச் 2026, 6:54 pm

விடுமுறை தினம் மற்றும் பங்குனி மாதப் பிறப்பையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள், பக்தா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், பக்தா்கள் வசதிக்காக கோயிலின் ராஜகோபுர திருப்பணி மண்டபத்தில் ஏா் கூலா், மின்விசிறி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பக்தா்ளுக்குத் தேவையான வசதிகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

வள்ளி திருக்கல்யாணம்:

இக்கோயிலில் பங்குனி உத்திர தினமான ஏப். 1ஆம் தேதி இரவு முருகப்பெருமான்-வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.