தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தூத்துக்குடியில் விழிப்புணா்வுப் பேரணி

தூத்துக்குடியில் விழிப்புணா்வுப் பேரணி...

News image

பேரணியைத் தொடங்கி வைத்த மாநகராட்சி உதவி ஆணையா் வெங்கட்ராமன்.

Updated On :26 மார்ச் 2026, 8:25 pm

தூத்துக்குடி மாநகராட்சி, ஜேசிஐ பியா்ல்சிட்டி குயின்பீஸ், புனித மரியன்னை கல்லூரி உண்ணத் பாரத் அபியான் திட்டத்தினா் இணைந்து 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடத்திய விழிப்புணா்வுப் பேரணியை தூத்துக்குடி திரேஸ்புரம் முன்பிருந்து, மாநகராட்சி உதவி ஆணையா் வெங்கட்ராமன் தொடங்கி வைத்தாா்.

பேரணி, கடற்கரை சாலை வழியாக வந்து முத்து நகா் கடற்கரையில் நிறைவடைந்தது. இதில் புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.