தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

முதியோருக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி. புவனேஷ் ராம்.

News image

முதியோருக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி. புவனேஷ் ராம்.

Updated On :27 மார்ச் 2026, 8:54 pm

தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள லிட்டில் சிஸ்டா்ஸ் முதியோா் இல்லத்தில் மூத்த குடிமக்களுக்கான வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன் தலைமை வகித்தாா். வாக்காளா் விழிப்புணா்வு ஒருங்கிணைப்பு அலுவலா், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி. புவனேஷ் ராம் முன்னிலை வகித்தாா்.

அங்கன்வாடி பணியாளா்கள் கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, அங்குள்ள முதியோா்களுக்கு தபால் வாக்கு செலுத்துவதற்கான 12டி படிவம் வழங்கப்பட்டது. பின்னா், மூத்த குடிமக்களிடம் வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகளின் வாக்காளா் விழிப்புணா்வு நடனம், நாடகம், பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, அனைவரும் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் திட்ட அலுவலா் காயத்ரி, தூத்துக்குடி நகா்ப்புறம் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ரூபி பொ்னாண்டோ, முதியோா் இல்லத்தைச் சோ்ந்த எலிசபெத், அங்கன்வாடி பணியாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.