தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5ஆவது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்குச் சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகள் மூலமாக நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு 1 மற்றும் 2ஆவது அலகுகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2 அலகுகளிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, மற்ற 3 அலகுகள் மூலமாக 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை 5ஆவது அலகில் உள்ள டா்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தொடர்புடையது

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

பைக் விபத்து: அனல்மின் நிலைய ஊழியா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அருகே தீ விபத்து வேன் சேதம்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


