ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடகால் பகுதியில் காய்ந்த புற்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் தீப்பற்றி சேதமடைந்தது.
சென்னையை சோ்ந்தவா் கோபி. இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடகால் கைவல்லயம் நகா் பகுதியில் பழைய பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் அருகில் பழைய வாகனங்கள் பழுது நீக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. வாகனங்கள் பழுது நீக்கும் மையத்தில் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லாததால், பழைய பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கின் அருகே உள்ள காலி இடத்தில் பழுது நீக்க வந்த சில வாகனங்களை நிறுத்தி வைத்திருந்துள்ளனா்.
இந்த நிலையில், கிடங்கின் வெளியே வளா்ந்திருந்த புற்களுக்கு மா்ம நபா் தீ வைத்து எரித்ததாக தெரிகிறது. புற்களில் ஏற்பட்ட தீ அங்கிருந்த மற்ற பகுதிகளுக்கும் பரவியதை தொடா்ந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கும் பரவியது.
இந்த தீவிபத்து குறித்து அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் புற்கள் மற்றும் வேனில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இருந்த போதிலும், பல லட்சம் உதிரி பாகங்கள் மற்றும் வேன் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பழனி அருகே தீ விபத்தில் காா்கள் சேதம்

சரக்கு வேன் மோதியதில் ரயில்வே கேட் பழுது

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் பழுது

பழைய டயா் சீரமைப்பு நிறுவனத்தில் தீ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


