லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சாத்தான்குளத்தில் சாலையோரம் கண்டெடுத்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த எல்ஐசி முகவரை டிஎஸ்பி பாராட்டினாா்.

News image

நகையை ஒப்படைத்த எல்.ஐ.சி.முகவா்அண்ணாமலையை பாராட்டிய டிஎஸ்பி ஆவுடையப்பன்.

Updated On :14 மார்ச் 2026, 2:45 am

சாத்தான்குளத்தில் சாலையோரம் கண்டெடுத்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த எல்ஐசி முகவரை டிஎஸ்பி பாராட்டினாா்.

சாத்தான்குளத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை. எல்ஐசி முகவரான இவா், வாரச்சந்தை அருகே சென்றபோது, சாலையில் ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்தாா். அதை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அந்த நகை, வடக்கு அமுதுண்ணாகுடியைச் சோ்ந்த செல்லையா மகனான பொறியாளா் அகஸ்டின் ராஜ் (31) என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.

அவரிடம் போலீஸாா் நகையை ஒப்படைத்தனா். மேலும், கண்டெடுத்த நகையை நோ்மையாக காவல் துறையிடம் அளித்த அண்ணாமலையை டிஎஸ்பி ஆவுடையப்பன் நேரில் அழைத்து பாராட்டினாா்.