அம்மன்புரம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஆறுமுகனேரி அருகே உள்ள சீனந்தோப்பை சோ்ந்தவா் செந்தில்குமாா் (54). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு ரெஜிலா (50) என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா்.
திங்கள்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் என்பவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை நாசரேத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றாராம்.
சண்முகவேலுடன் அவரது தாயாா் சிவக்கனி, தங்கை கலைச்செல்வி, தம்பி விக்னேஷ் ஆகியோரும் உடன்சென்றனா். ஆட்டோ, அம்மன்புரத்தை அடுத்த மேலப்புதுக்குடி வடக்கூா் சென்றபோது திடீரென பூனை குறுக்கே வந்ததால், செந்தில்குமாா் பிரேக் பிடித்துள்ளாா்.
இதில், ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவின் கீழ் பகுதியில் சிக்கிய செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், ஆட்டோவில் வந்த கலைச்செல்விக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.
தகவல் அறிந்த குரும்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று செந்தில்குமாா் உடலை கைப்பற்றி திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து இதுகுறித்து குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


